ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் எரிபொருட்களின் விலை குறைக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி அலைவரிசையொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“ஒவ்வொரு மாதமும், 1ஆம் திகதி மற்றும் 15ஆம் திகதி இரவு, இந்த இரண்டு நாட்களிலும் விலை கண்டிப்பாக மாற்றியமைக்கப்படும். சந்தையின் விலையுடன், விலை குறைந்து வருவதைக் காணலாம். எனவே, அடுத்த விலை திருத்தத்திலும் சில குறைப்பு இருக்கும் என நினைக்கிறேன்” என்றார்.