சுகாதார விதிமுறைக்கமைய விசேட வைத்திய குழுவினர்கள் முன்னிலையில் சிறுமி ஹிசாலியின் சடலத்தை தோண்டி எடுக்குமாறு நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதின் வீட்டில் பணி புரிந்த டயகம தோட்டத்தை சேர்ந்த ஜுட் ஹிசாலின் கடந்த 15 ஆம் திகதி தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்தார்
உயிரிழந்த சிறுமியின் சடலம் டயகம தோட்ட மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் ஹிசாலியின் மரணத்தின் பின்னணியில் உள்ள குற்வாளிகளை அடையாளம் கண்டு நீதியின் முன் நிறுத்த வேண்டும் என நாடாளவிய ரீதியில் போராட்டகள் இடம்பெற்று வருவதுடன் சிறுமியின் தாயார் தனது மகளின் மரணத்தால் சந்தேகம் உள்ளதெனவும் புதைப்பட்ட மகளின் உடலை தோண்டி மீண்டும் பிரேத பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என முறைப்பாடு செய்துள்ளார்.
இந்நிலையில் கொழும்பு நீதிமன்றம் புதைக்கப்பட்ட சிறுமியின் உடலை தோண்டி எடுத்து விசேட வைத்திய குழுவினர் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து டயகம தோட்டத்தில் புதைக்கப்பட்ட சிறுமியின் மயானம் பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் கொழும்பில் இருந்து வருகைத்தந்த சிரேஷ்ட சட்டத்தரணி ஹன்ஷா அபேவர்த்தன இன்று (29) நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் சிறுமி ஹிசாலியின் உடலை தோண்டி எடுக்க அனுமதி கோரி மனு ஒன்றினை சமர்பித்தார்.
இந்த மனுவை பரிசீலித்த நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி லூஷா குமாரி தர்மகீர்த்த சிறுமியின் உடலை விசேட வைத்திய குழுவினர் முன்னிலையில் சுகாதார விதிமுறைகளை பேணி பிரதேச கிராம உத்தியோகஸ்தர் மற்றும் பொது சுகாதார பரிசோதகர் முன்னிலையில் நாளை (30) காலை 7.30 மணிக்கு தோண்டி எடுத்து பலத்த பொலிஸ் பாதுகாப்போடு பேராதெனிய வைத்திய சாலைக்கு கொண்டு பரிசோதனைகாக செல்லுமாறு உத்தவிட்டுள்ளார்.