Date:

புதிய சிறுநீரக சத்திர சிகிச்சையியல் மற்றும் சிறுநீரகவியல் பிரிவு திறந்து வைப்பு (படங்கள்)

இலங்கை தேசிய வைத்தியசாலை வளாகத்தில் அமைக்கப்பட்ட புதிய சிறுநீரக சத்திர சிகிச்சையியல் மற்றும் சிறுநீரகவியல் பிரிவு கட்டிடம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று (29) முற்பகல் திறந்து வைக்கப்பட்டது.

இலவச சுகாதார சேவையின் சிறந்த பிரதிபலன்களை இலங்கை வாழ் மக்களுக்கு கிடைக்க செய்யும் உன்னதமான நோக்கத்தில் E.A.M. மெலிபன் டெக்ஸ்டைல் தனியார் நிறுவனத்தின் பூரண நிதி நன்கொடையின் கீழ் இந்த மூன்று மாடிக் கட்டிடம் நிறுவப்பட்டுள்ளது.

சுமார் 300 மில்லியன் ரூபாய் செலவில் 13 கட்டில்களை கொண்ட தீவிர சிகிச்சை பிரிவை உள்ளடக்கியதாக இந்த கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. புதிய சிறுநீரக சத்திர சிகிச்சையியல் மற்றும் சிறுநீரகவியல் பிரிவு கட்டிடத்தின் நினைவு பலகை பிரதமரினால் திறந்துவைக்கப்பட்டது.

இதற்கான நிதி நன்கொடை வழங்கிய E.A.M. மெலிபன் டெக்ஸ்டைல் தனியார் நிறுவனத்தின் தலைவர் இல்யாஸ் அப்துல் கரீமுடன் பிரதமர் நட்பு ரீதியாக கலந்துரையாடினார்.

குறித்த நிகழ்வில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சி, சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் விசேட வைத்திய நிபுணர் S.H.முணசிங்க, சுற்றாடல் துறை அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, தேசிய வைத்தியசாலையின் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் W.K.விக்ரமசிங்க, E.A.M. மெலிபன் டெக்ஸ்டைல் தனியார் நிறுவனத்தின் தலைவர் இல்யாஸ் அப்துல் கரீம் உள்ளிட்ட அந்நிறுவனத்தின் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

May be an image of outdoors and text that says "INSTITUTE OF UROLOGY & මොත්‍ර ලිංගික ශල්‍ය වෛද්‍ය සහ වකුගඩු රෝග NEPHROLOGY විද්‍යායතනය சிறுநீரக சத்திர சிகிச்சையியல் மற்றும் சிறுநீரகவியல் நிறுவனம் ii T"
May be an image of indoor
May be an image of hospital and indoor
May be an image of 6 people, people standing and indoor
May be an image of 5 people, people standing and indoor

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸை வாங்க 6 முதலீட்டாளர்கள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸை கொள்வனவு செய்வதற்கான ஏலத்தில் இலங்கையைச் சேர்ந்த மூன்று முதலீட்டாளர்கள்...

ரொஷான் ரணசிங்கவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டி

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக...

பாடசாலை போஷாக்கு திட்டத்திற்காக பகிர்ந்தளிக்கப்பட்ட அரிசி தொடர்பில் ஜனாதிபதி அலுவலகம் விளக்கம்

மனிதப் பாவனைக்கு உகந்ததென உறுதி செய்யப்பட்ட அரிசி மாத்திரமே, பாடசாலை போஷாக்கு...

ஈரான் ஜனாதிபதி நாளை நாட்டுக்கு

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை மக்களுக்கு கையளிக்க ஈரான் ஜனாதிபதி...