Date:

தென் மாகாண பாடசாலை கல்வி செயற்பாடுகளை 5 நாட்களுக்கும் முன்னெடுக்க தீர்மானம்

தென் மாகாணத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளையும் நாளை(25) முதல் எதிர்வரும் 29ஆம் திகதி வரை 5 நாட்களுக்கும் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தென் மாகாண கல்வி அதிகாரிகளுக்கு இடையில் இன்று(24) நடைபெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எனினும் போக்குவரத்து பிரச்சினையால், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகத்தினருக்கு பாடசாலைக்கு வருகை தர முடியாவிடின் அது குறித்து முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகள் நாளை திறக்கப்படுகின்ற போதிலும், போக்குவரத்து சிரமம் காரணமாக ஆசிரியர்களுக்கு  பாடசாலைகளுக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

அதற்கான முறையான வேலைத்திட்டத்தை அரசாங்கம் தயாரிக்க வேண்டும் என சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

நாளை(25) முதல் திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மாத்திரம் பாடசாலைகளை திறப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

புதன் மற்றும் வௌ்ளிக்கிழமைகளில் வீடுகளில் அல்லது Online ஊடாக கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்குமாறு அதிபர் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவித்து கல்வி அமைச்சினால் சுற்றுநிருபம் வௌியிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு

இன்று (06) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாப்ஸ் சமையல்...

முன்னாள் அமைச்சர் கெஹலியவின் புதல்வி சமித்ரிக்கு பிணை

இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு...

ஈரானிலிருந்து வெளியேற அமெரிக்க பிரஜைகளுக்கு டிரம்ப் அறிவிப்பு

ஈரானில் உள்ள அமெரிக்க குடிமக்கள், உடனடியாக அங்கு வந்து வெளியேற வேண்டும்...

கெஹெலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகள் கைது!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகளான சமித்ரி ரம்புக்வெல்ல இலஞ்ச...