18 அமைச்சர்கள் நியமனம் பெற்றுள்ள நிலையில், மேலும் 12 அமைச்சர்கள் நியமனம் பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்வரும் இரண்டு வாரங்களில் இவ்வாறு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, தற்போதுள்ள இடைக்கால அமைச்சரவையில் எதிர்வரும் இரண்டு வாரங்களில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்தியதன் பின்னர் சர்வ கட்சி அரசாங்கம் ஒன்றினை அமைப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கைகளை முன்னெடுப்பார் என தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.