Date:

ரிஷாட் வீட்டில் பணியாற்றிய 5 பெண்களிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டது

2010 ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிப்புரிந்த 11 பெண்களில் ஐந்து பெண்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.

ஹிஷாலினியின் மரணம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக டயகம பகுதிக்கு சென்றுள்ள காவல்துறை குழுக்களினால் இந்த வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இன்னும், ஐந்து பெண்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பயணியாற்றிய நிலையில், தீக்காயங்களுக்கு உள்ளாகி மரணித்த ஹிஷாலினி என்ற 16 வயதான சிறுமி தொடர்பில் நியமிக்கப்பட்ட இரண்டு காவல்துறை குழுக்கள் இன்றைய தினமும் ஹட்டன் – டயகம பகுதியில் விசாரணைகளை முன்னெடுக்கின்றன.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் இல்லத்தில் தீக்காயங்களுக்கு உள்ளாகி மரணித்த சிறுமியின் சரீரத்தை மீளத் தோண்டி, இரண்டாம் பிரேத பரிசோதனையை மேற்கொள்வதற்காக விசேட வைத்திய அதிகாரிகள் குழு ஒன்று நேற்று நியமிக்கப்பட்டது.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட வைத்திய விஞ்ஞானப்பிரிவின் பேராசிரியர் ஜீன் பெரேரா தலைமையில் 3 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த குழு நாளைய தினம் டயகம பகுதிக்கு சென்று, அங்கு புதைக்கப்பட்டுள்ள ஹிஷாலினியின் சரீரத்தை மீளத் தோண்டி எடுக்கவுள்ளது.

இதன்போது துறைசார்ந்த நிபுணர்கள் பலர் கலந்துக் கொள்ளவுள்ளனர்.

ஹிஷாலினியின் சரீரம் மீளத்தோண்டப்பட்டு அவர் மரணித்த விதம், துஸ்பிரயோகம் செய்யப்பட்டமை, அசம்பாவிதம் இடம்பெற்ற காலகட்டம், சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டாரா போன்ற பல விடயங்கள் குறித்து பரிசீலிக்கப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

இன்றைய வானிலையில் ஏற்படும் மாற்றம்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ...

YMMA திஹாரி கிளையினால் 1000 தென்னங்கன்றுகள் விநியோகம் (Pics)

YMMA திஹாரி கிளையின் ஏற்பாட்டில் 1000 தென்னங்கன்றுகளை இலவசமாக வழங்கும் நிகழ்வு...

மனைவியின் மாணவிகளுக்கு முன் நிர்வாணமாக நின்ற 32 வயதுடைய நபர்

மொனராகலை அதிமலே பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் தரம் 5 இல் கல்வி...

இலங்கை வங்குரோத்தான நாடல்ல, இறக்குமதித் தடை நீக்கப்படும் – ஜனாதிபதி

கடனை மறுசீரமைக்கும் வலிமை கொண்ட நாடு என்ற சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுள்ளதால்...