குருணாகல் – குளியாப்பிட்டி, எலதலாவ பகுதியில் கூரான ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணாருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
காணி பிரச்சினை காரணமாக குறித்த பெண் அவரது சகோதரரால் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீகல்ல பகுதியைச் சேர்ந்த 76 வயதான பெண்ணொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலைச் சம்பவம் தொடர்பில் 71 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.