ஜனாதிபதி பதவி விலகி புதிய இடைக்கால அரசை அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமாகும் என பொதுஜன பெரமுன எம்.பிக்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டளஸ் அலகப்பெரும, சன்ன ஜயசுமன, நாலக கொடஹேவா உள்ளிட்ட 19 எம்.பிக்கள் இவ்வாறு கோரிக்கை கடிதமொன்றை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.