நுவரெலியா பிரதேச மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை (09) முன்னெடுத்தனர்.
நுவரெலியா பிரதான நகரில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டு நுவரெலியா பிரதான பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு பழைய கடை பதையினுடாக பேரணியாக சென்று மீண்டும் பிரதான பஸ் தரிபிடத்திற்கு முன்பாக வருகை தந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
எரிவாயு இல்லை, எரிபொருள் இல்லை, மருந்துபொருட்கள் இல்லை மக்களால் இந்த நாட்டில் வாழ முடியவில்லை. இந்த அரசாங்கம் வீட்டுக்கு செல்ல வேண்டும் என தெரிவித்து மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இப் போராட்டத்தின் போது அரசாங்கத்திற்கு எதிராக பதாதைகளை ஏந்தியவாறும் , அரசாங்கத்திற்கு எதிராக கோசங்களை எழுப்பியவாறும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். (நிருபர் – டி.சந்ரு செ.திவாகரன்)