Date:

ஹிஷாலினி மரணம்: சட்டமா அதிபர் திணைக்களம் வெளிப்படுத்திய முக்கிய தகவல்கள்

16 வயதான சிறுமி ஹிஷாலினி மரணித்த சம்பவம் தொடர்பில் கைதான நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவி, மாமனார், மைத்துனர் மற்றும் சிறுமியைப் பணிக்கு அமர்த்திய தரகர் ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று பிற்பகல் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, அவர்களை அடுத்த மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பில், பிரதி மன்றாடியார் நாயகம் திலீப பீரிஸ் சமர்ப்பணங்களை முன்வைத்தார்.

அடக்கம் செய்யப்பட்டுள்ள சிறுமியின் உடலைத் தோண்டி எடுத்து உரிய பிரேத பரிசோதனையை மேற்கொள்வதற்கான உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு அவர் கோரியுள்ளார்.

அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான், அடக்கம் செய்யப்பட்டுள்ள சிறுமியின் உடலை, தோண்டி எடுத்து சிரேஷ்ட சட்டவைத்திய அதிகாரி அடங்கிய குழுவொன்றினால் மீண்டும் பிரேத பரிசோதனையை மேற்கொண்டு அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறுஉத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபர்களின் பிணைக்கோரலை நிராகரித்த நீதவான், குறித்த சிறுமி தீப்பரவலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, உண்மையான தகவல்களை மறைக்க சந்தேகநபரின் தந்தை, செயற்பட்டுள்ள விதம் தெரியவந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

குறித்த சந்தேகநபர்கள் சமூகத்தில் அந்தஸ்த்துள்ள உயர் மட்ட தரப்பினருடன் தொடர்பு கொண்டுள்ளதன் காரணமாக இந்த சந்தர்ப்பத்தில் பிணையில் விடுவிக்கப்பட்டால் சாட்சிகள் அச்சுறுத்தப்படுகின்றமை, சாட்சியங்களை அழித்தல் என்பவற்றுக்கு வாய்ப்பு இருப்பதன் காரணமாக பிணைசட்டத்தின் முறைமைகளுக்கு அமைய, அதனை நிராகரித்ததாக நீதவான் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து கருத்து வெளியிட்ட பிரதி மன்றாடியார் நாயகம், சிறுமி தீப்பற்றலுக்கு உள்ளான வீட்டின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் செயற்பட்டுள்ளதன் காரணமாக அவரை, வழக்கின் சந்தேகநபராக எதிர்காலத்தில், நீதிமன்றில் முன்னிலைப்படுத்த எதிர்ப்பார்த்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

வழக்கு விசாரணை இன்றைய தினம் இடம்பெற்ற போது, 8 பக்கங்கள் கொண்ட விசாரணைகளின் முன்னேற்றம் அடங்கிய அறிக்கைகளை நீதிமன்றில் முன்வைத்த பிரதி மன்றாடியார் நாயகம், இந்த வழக்கானது சிறுவர் வர்த்தகம் எனவும், மரணித்த சிறுமி குறித்த வீட்டில் பணிப்பெண் வேலைக்கு மேலதிகமாக பாலியல் செயற்பாடுகளுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.

சிறுமியின் மரணம் தற்கொலையா அல்லது, கொலையா என்பது தொடர்பில் பாரிய சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கூறிய பிரதி மன்றாடியார் நாயகம், குறித்த சிறுமி கடந்த 3ஆம் திகதி காலை 6.45 அளவில், தீப்பற்றலுக்கு உள்ளான போதும், முற்பகல் 8.20 அளவிலே மருத்துவமனையிலே அனுமதிக்கப்பட்டதாக விசாரணை அறிக்கைகள் தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

மரணித்த சிறுமி தங்கியிருந்த வீட்டில் வாகனங்கள் மற்றும் சாரதிகளுக்கு எந்தவித தட்டுப்பாடுகள் இல்லாத போதிலும், 1990 என்ற நோயாளர் காவுவண்டி வரும் வரை காத்திருந்து கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றமை, சந்தேகத்திற்குரிய செயற்பாடென அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கின் முதலாவது சந்தேகநபரான ரிஷாட் பதியூதினின் மனைவியின் தந்தையான 2வது சந்தேகநபர், சிறுமியைத் தேசிய வைத்தியசாலையில் அனுமதித்தபோது, அவரது பெயரை இஷானி என்ற சிங்கள மொழிநடையிலும், 18 வயதானவர் என்றும் குறிப்பிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த வீட்டில், பணிப்பெண்ணாக பணிபுரிந்த மேலும் 9 சிறுமிகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அவர்களில், இரண்டு பேர் இந்த வழக்கின் 4 ஆவது சந்தேகநபரான ரிஷாட் பதியூதீனின் மனைவியின் சகோதரரால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளானதாகவும், அதில் ஒரு சிறுமி அவரால் இரண்டு தடவைகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகவும், தெரியவந்துள்ளதாக பிரதி மன்றாடியார் நாயகம் தெரிவித்துள்ளார்.

ரிஷாட் பதியுதீனின் வீட்டில் 8 சீ.சி.ரீ.வி கமராக்கள் செயற்படுகின்ற போதிலும் மரணம் சம்பவித்த தினம் 6.30 மணியின் பின்னர் 6 சீ.சி.ரீ.வி கமராக்கள் செயற்படவில்லையென குறிப்பிட்ட அவர், இந்தச் செயற்பாடானது பாரிய சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் அது குறித்து விசாரணைகள் இடம்பெறுவதாகவும் கூறினார்.

குறித்த சிறுமி பணியாற்றிய வீட்டின் பிரதானியான நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் நேரடியாக பொறுப்புக்கூற வேண்டும் எனக் குறிப்பிட்ட பிரதி மன்றாடியார் நாயகம் அவர் சந்தேகநபராக நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவார் என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

புதிய விசா நடைமுறை அறிமுகம்

ஈ - விசா பெற்றுக் கொள்ள குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தின் ...

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை: மேலுமொருவர் கைது

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞனை கடத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்த...

ஷாபி வழக்கு இன்னும் நிறைவு பெறவில்லை – அத்துரலியே ரதன தேரர்

நாம் ஒருபோதும் இனவாதத்தினை தூண்டவில்லை என்பதோடு ஒருபோதும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக...

சாதாரண தரப் பரீட்சை மே மாதம்- திருத்த பெறுபேறுகள்

கல்விப் பொதுத் தராதர மீள் திருத்த பெறுபேறுகள் இவ்வருட சாதாரண தரப்...