Date:

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் தொழில் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் – மஸ்கெலியாவில் போராட்டம்

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் தொழில் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும், பெருந்தோட்ட கம்பனிகளின் நடவடிக்கைக்கு எதிராகவும் மஸ்கெலியாவில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் மஸ்கெலியா எரிபொருள் நிலையத்துக்கு முன்பாக நடைபெற்ற இப்போராட்டத்துக்கு தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் தலைமை தாங்கினார்.

” ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு இடம்பெற்றுள்ளது எனக்கூறப்பட்டாலும் தொழிலாளர்களின் தொழில் சுமை அதிகரிக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கான பெயருக்கு 20 கிலோ கொழுந்து பறிக்க வேண்டியுள்ளது. அதேபோல பல தோட்டங்களில் வேலை நாட்கள் குறைக்கப்பட்டுள்ளன. நலன்புரி சலுகைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இவ்வாறான அடக்குமுறை செயற்பாடுகளை கம்பனிகள் கைவிட வேண்டும்.” – என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பதில் பொதுச் செயலாளராக துமிந்த திஸாநாயக்க

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக துமிந்த திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா...

சன்னஸ்கலவுக்கு பிணை

கைது செய்யப்பட்ட முன்னாள் பிரபல ஆசிரியர் உபுல் சாந்த சன்னஸ்கல பிணையில்...

பால் தேநீர் விலை

பால் தேநீர் ஒன்றினை 80 ரூபாவிற்கு விற்பனை செய்யுமாறு தேசிய நுகர்வோர்...

ஈரான் ஜனாதிபதியை சஜித் புறக்கணித்தது ஏன்?

ஈரான் ஜனாதிபதியின் சந்திப்பை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நிராகரித்துள்ளார். ஈரான் ஜனாதிபதி...