Date:

இஷாலினி விவகாரம் -ரிஷாட் பதியுதீனின் மனைவி ஆயிஷா கைது

வீட்டில் பணிபுரிந்த சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ரிஷாட் பதியுதீனின் மனைவி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இன்று (23) தெரிவித்தார்.

ரிஷாட்டின் மனைவியான ஷெஹாப்தீன் ஆயிஷா (46), மனைவியின் தந்தையான மொஹமட் ஷெஹாப்தீன் (70) ஆகியோர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அத்துடன் சிறுமியை கொழும்புக்கு அழைத்துவந்து பணிக்கு அமர்த்திய தரகரான டயகம பிரதேசத்தைச் சேர்ந்த பொன்னையா பண்டாரம் அல்லது சங்கர் எனப்படும் 64 வயதான  நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், சந்தேக நபர்களை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

முன்னாள் அமைச்சரான பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் கொழும்பு இல்லத்தில் பணிப்பெண்ணாக வேலைச்செய்தபோது, தலவாக்கலை- டயகமவைச் சேர்ந்த 16 வயதான சிறுமி எரிகாயங்களுக்கு உள்ளாகி பின்னர் மரணமடைந்தார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், சிறுமியின் மரணம் தொடர்பிலான  விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை கவனிப்பதற்கு சட்டமா அதிபர் சஞ்ஜய ராஜரட்ணம் நேற்று (22) குழுவொன்றை நியமித்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு ஒத்திவைப்பு

ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் அரச இறுதிச் சடங்கு...

இலங்கை கடற்பரப்புக்கு வெளியே ஈரான் கப்பல் மீது நீர்மூழ்கி தாக்குதல்

இலங்கைக் கடற்பரப்புக்கு வெளியே ஈரானியக் கப்பலொன்று மீதான நீர்மூழ்கித் தாக்குதலொன்றில் குறைந்தது...

விபத்துக்குள்ளான ஈரானிய கப்பலில் 180 பேர்: மீட்கப்பட்டோர் காலி கராப்பிட்டியவிற்கு

ஈரானிய கடற்படை கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேர் காலி கராபிட்டிய...

இஸ்ரேலுக்கு சீனா எச்சரிக்கை

பலவந்தமாகப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது எனவும், அது புதிய சிக்கல்களையும் பாரிய...