“விவசாயிகளுக்கு உரத்தை வழங்கு, எரிபொருள் விலையை குறை, கல்வியை பாதுகாக்கவும், அடக்குமுறைக்கு நாம் அடிபணிய மாட்டோம், நாட்டை அழிக்கும் ஒடுக்குமுறை அரசாங்கத்தை விரட்டுவோம்.” எனும் தொனிப்பொருளின் கீழ் ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டமொன்று இன்று (22) ஹோமாகமவில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமை தாங்கினார், மேலும் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அடக்குமுறை அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்த தொடர் ஆர்ப்பாட்டத்தின் மற்றொரு படியாக இந்த ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
