Date:

இடுகம நிதியத்திற்கு மேலும் 2 மில்லியன் ரூபாய் நன்கொடை

இடுகம கொவிட் – 19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்தை கட்டியெழுப்பும் நோக்கில் இலங்கை டராஸ் நிறுவனத்தினால் 2 மில்லியன் ரூபாய்க்கான காசோலை இன்று  பிற்பகல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.

இதேவேளை கொவிட் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான பீ.பீ.ஈ. (PPE) கருவிகளும் டராஸ் நிறுவன பிரதிநிதிகளினால் பிரதமரிடம் கையளிக்கப்பட்டது.

கொவிட்- 19 தொற்று நிலைமைக்கு மத்தியில் சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக எதிர்காலத்திலும், அரசாங்கத்திற்கு தேவையான ஆதரவை வழங்க தயாராக இருப்பதாகவும் டராஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறித்த நிகழ்வில் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, மாகாண சபைகள் உள்ளூராட்சி அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க, இலங்கை டராஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு.ரகில் பெர்னாண்டோ, தலைமை செயல்பாட்டு முகாமையாளர் தர்ஷிகா அத்தநாயக்க, தலைமை நிர்வாக அதிகாரி மலித் ரணதேவ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம்

சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் இன்று (22) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. காலை...

இன்றைய வானிலையில் ஏற்படும் மாற்றம்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ...

YMMA திஹாரி கிளையினால் 1000 தென்னங்கன்றுகள் விநியோகம் (Pics)

YMMA திஹாரி கிளையின் ஏற்பாட்டில் 1000 தென்னங்கன்றுகளை இலவசமாக வழங்கும் நிகழ்வு...

மனைவியின் மாணவிகளுக்கு முன் நிர்வாணமாக நின்ற 32 வயதுடைய நபர்

மொனராகலை அதிமலே பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் தரம் 5 இல் கல்வி...