Date:

இடுகம நிதியத்திற்கு மேலும் 2 மில்லியன் ரூபாய் நன்கொடை

இடுகம கொவிட் – 19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்தை கட்டியெழுப்பும் நோக்கில் இலங்கை டராஸ் நிறுவனத்தினால் 2 மில்லியன் ரூபாய்க்கான காசோலை இன்று  பிற்பகல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.

இதேவேளை கொவிட் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான பீ.பீ.ஈ. (PPE) கருவிகளும் டராஸ் நிறுவன பிரதிநிதிகளினால் பிரதமரிடம் கையளிக்கப்பட்டது.

கொவிட்- 19 தொற்று நிலைமைக்கு மத்தியில் சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக எதிர்காலத்திலும், அரசாங்கத்திற்கு தேவையான ஆதரவை வழங்க தயாராக இருப்பதாகவும் டராஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறித்த நிகழ்வில் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, மாகாண சபைகள் உள்ளூராட்சி அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க, இலங்கை டராஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு.ரகில் பெர்னாண்டோ, தலைமை செயல்பாட்டு முகாமையாளர் தர்ஷிகா அத்தநாயக்க, தலைமை நிர்வாக அதிகாரி மலித் ரணதேவ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இவரைப் பற்றிய தகவல்கள் தெரிந்தால், உடனே அறிவிக்கவும்!

தெஹிவளை பிரதேசத்தில் கடந்த டிசம்பர் 30 ஆம் திகதி, 16 வயது...

Breaking சொரணாதோட்டை மத்திய கல்லூரிக்கு அருகில் மண்சரிவு அபாயம்

பதுளை - சொரணாதோட்டை மத்திய மகா வித்தியாலயத்திற்கு அருகில் உள்ள மண்...

’ரி 20’ உலகக்கிண்ணக் கோப்பையை சுற்றுப்பயணம் ஆரம்பம்

2026 ஆம் ஆண்டு இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்தும் ஐ.சி.சி. இருபதுக்கு...

இலங்கை – இங்கிலாந்து மோதும் முதலாவது ஒருநாள் போட்டி இன்று!

சு்றுலா இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட்...