இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைகளை எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை நவம்பர் மாதம் 15 ஆம் திகதியும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை நவம்பர் மாதம் 15 ஆம் திகதியும் நடத்தப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, தரம் 01 இற்கு மாணவர்களை இணைப்பது தொடர்பான விண்ணப்ப முடிவுத் திகதி ஜூலை 31 இலிருந்து ஓகஸ்ட் 07 ஆக நீடிக்கப்பட்டுள்ளது.