13 கோடி ரூபாய் பெறுமதியான 13 கிலோகிராம் ஹெரோயினுடன் கொழும்பு – ஆட்டுப்பட்டித்தெருவில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனை, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இன்று(18) தெரிவித்தார்.
வீடொன்றின் சமயலறையில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் குறித்த போதைப்பொருள் மீட்கப்பட்டதுடன், வீட்டில் இருந்த கணவன் – மனைவி ஆகியோர் கைதுசெய்யப்பட்டதாக அவர் கூறினார்.
தற்போது இந்தியாவில் இருக்கும் போதைப்பொருள் வர்த்தகர் ‘கிம்புலா எலே குணா’வின் சகோதரரான சுரேஷ் என்பவரும் அவரது மனைவியுமே கைதானவர்கள் என, விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் நேற்று (17) மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக ஊடகப்பேச்சாளர் கூறினார்.