Date:

ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி யாழில் போராட்டம்

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
 
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
 
இதன்போது ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டோரின் சட்டவிரோத கைது, கல்வியை தனியார் மயப்படுத்தல், தனிமைப்படுத்தல் சட்டத்தை அடக்கு முறைகளுக்கு பாவிக்காதே, கல்வியில் இராணுவமயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
 
மேலும் அரசின் சர்வாதிகார போக்குக்கு எதிராக அனைவரும் ஓரணியில் திரண்டு, தங்களது எதிர்ப்பினை வெளியிட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
குறித்த போராட்டத்தில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஆசிரியர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஜெய்சங்கரை சந்தித்தார் பிரதமர் ஹரிணி

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய, புதுடெல்லியில் இந்திய வெளியுறவு...

காய்கறிகளின் மொத்த விலை குறைந்தது

தம்புள்ளை சிறப்பு பொருளாதார மையத்தில் அதிக அளவு காய்கறிகள் கையிருப்பில் உள்ளதாலும்,...

அரச பொறியியல் கூட்டுத்தாபன முன்னாள் பணிப்பாளருக்கு பிணை

இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட அரச பொறியியல்...

சுங்கம் தடுத்துள்ள வாகனங்களை விடுவிப்பது குறித்த அறிவிப்பு

நாட்டில் நாணயக் கடிதங்களை திறந்து உற்பத்தி செய்யப்பட்ட நாடு அல்லாத வேறு...