Date:

நடிகர் விஜய்க்கு ரூ. 1 லட்சம் அபராதம்

நடிகர் விஜய் இங்கிலாந்தில் இருந்து 2018 ஆம் ஆண்டு ரோல்ஸ் ரொய்ஸ் (Rolls Royce) கார் ஒன்றை இறக்குமதி செய்தார்.

இந்த காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கோரி நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது அதனை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அத்துடன், நடிகர் விஜய்க்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதித்த உயர்நீதிமன்றம், அபராத தொகையை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்குமாறு உத்தரவிட்டது.

நடிகர்கள் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோக்களாக இருக்க வேண்டும். ரீல் ஹீரோக்களாக இருக்க கூடாது. வரி என்பது நன்கொடையல்ல நாட்டிற்கு குடிமகன்கள் செலுத்த வேண்டிய கட்டாய பங்களிப்பு.

சமூக நீதிக்கு பாடுபடுவதாக பிரதிபலிக்கும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது என உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

6 இலட்சம் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு...

Irish dena கப்பலில் உயிரிழந்தோரின் உடல்கள் ஈரானுக்கு!

இலங்கைக்குத் தெற்கே உள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்குள்ளான 'IRIS DENA' கப்பலில்...

ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது’

ஹோர்முஸ் நீரிணையை எதிரிகளுக்கு எதிரான ஒரு மூலோபாய ஆயுதமாகத் தொடர்ந்து பயன்படுத்தப்போவதாக...

நாட்டில் ஏப்ரல் வரை எரிபொருளுக்கு பிரச்சினை இல்லை!

இந்த மாதத்திற்குள் இலங்கைக்கு வருமென உறுதிப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் கப்பல்கள் மூலம், எதிர்வரும்...