Date:

கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் பணி நீக்கம்

தென் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவான பிஜியில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவிட்டால் பணி நீக்கம் என அந்நாட்டு அரசாங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது.

கொவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் தங்கள் வேலையை இழக்க நேரிடும் என்று பிரதமர் பிராங்க் பைனிமராமா அறிவித்துள்ளார்.

எதிர்வரும் ஆகஸ்ட் 15ஆம் திகதிக்குள் முதலாவது கொவிட் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளாத அரசு ஊழியர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவார்கள் என்றும் நவம்பர் முதலாம் திகதிக்குள் இரண்டாவது கொவிட் தடுப்பூசியை செலுத்தப்படாவிட்டால், பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் அந்நாட்டு பிரதமர் பிராங்க் பைனிமராமா தெரிவித்துள்ளார்.

ஒரு சில நாடுகள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள மக்களை ஊக்குவிக்கும் விதமாக சலுகைகள் மற்றும் பரிசுகளை அறிவித்துள்ளன.

இன்னும் சில நாடுகள் இதுபோன்ற கடுமையான கட்டுப்பாடுகள் மூலம் மக்களை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாட்டை உலுக்கிய விபத்து – இருவர் அதிரடி கைது

தியத்தலாவ கார் பந்தயத்தின் போது ஏற்பட்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன்...

தென் மாகாண ஆளுநர் இராஜினாமா

தென் மாகாண ஆளுநர் வில்லி கமகே தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி...

தியதலவை கார் பந்தய விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு (PHOTOS)

தியதலவை கார் பந்தயப் போட்டியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7ஆக...

சுதந்திரக் கட்சி அலுவலகத்திற்கு முன்பாக அமைதியின்மை

கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு முன்பாக பதற்றமான சூழல்...