Date:

கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் பணி நீக்கம்

தென் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவான பிஜியில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவிட்டால் பணி நீக்கம் என அந்நாட்டு அரசாங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது.

கொவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் தங்கள் வேலையை இழக்க நேரிடும் என்று பிரதமர் பிராங்க் பைனிமராமா அறிவித்துள்ளார்.

எதிர்வரும் ஆகஸ்ட் 15ஆம் திகதிக்குள் முதலாவது கொவிட் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளாத அரசு ஊழியர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவார்கள் என்றும் நவம்பர் முதலாம் திகதிக்குள் இரண்டாவது கொவிட் தடுப்பூசியை செலுத்தப்படாவிட்டால், பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் அந்நாட்டு பிரதமர் பிராங்க் பைனிமராமா தெரிவித்துள்ளார்.

ஒரு சில நாடுகள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள மக்களை ஊக்குவிக்கும் விதமாக சலுகைகள் மற்றும் பரிசுகளை அறிவித்துள்ளன.

இன்னும் சில நாடுகள் இதுபோன்ற கடுமையான கட்டுப்பாடுகள் மூலம் மக்களை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஆயுதங்களுடன் ஜிங்கா கைது!

வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரும், திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவருமான 'ஹீனட்டியன...

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தாய்வானின் வடகிழக்கு கடலோர நகரமான யிலானுக்கு அருகே நேற்று இரவு, 7.0...

பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும்...

புனித ஹஜ் வழிகாட்டல் கருத்தரங்கு

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் ஹஜ் உம்ரா குழு இணைந்து,...