Date:

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் – இத்தாலி அணி வெற்றி

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இத்தாலி அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி கடந்த மாதம் 11-ஆம் திகதி தொடங்கியது.
24 அணிகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்று முடிவில் இத்தாலி- இங்கிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
தோல்வியே சந்திக்காமல் இறுதி சுற்றை எட்டிய இவ்விரு அணிகளில் சாம்பியன் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிஆட்டம் லண்டன் வெம்ப்லி ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
ஆட்டத்தில் முதல் பாதியில் இங்கிலாந்து அணி ஒரு கோலுடன் முன்னிலை வகித்தது. அதில் இங்கிலாந்து அணி வீரர் லூக் ஷாவின் கோல் 1 நிமிடம் 57 வது வினாடியில் அடிக்கப்பட்டது.
இது யூரோ சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் அடித்த வேகமான கோல் ஆகும்.
இதனைத்தொடர்ந்து நடந்த இரண்டாவது பாதி ஆட்டத்தின் 67வது நிமிடத்தில் இத்தாலி அணி வீரர் லியோனர்டோ போனுக்சி கோல் அடித்து அசத்தினார். இதனால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலைக்கு வந்தது. தொடர்ந்து நடந்த ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்துக்கொண்ட முயற்சிகள் பலனளிக்காமல் போனது.
இதனைத்தொடர்ந்து அளிக்கப்பட்ட அதிகப்படியான நேரத்திலும் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. பின்னர் பெனாலிட்டி ஷூட் அவுட் முறையில் வெற்றியை தீர்மானிக்க முடிவு செய்யப்பட்டது.
அதில் இத்தாலி அணி 3 கோல்களும், இங்கிலாந்து அணி 2 கோல்களும் அடித்தன. இதன்அடிப்படையில் இத்தாலி அணி வெற்றி பெற்று இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

“பாடசாலைகள் ஆரம்பமாகும் திகதியில் மாற்றமில்லை”

மீண்டும் பாடசாலைகள் ஆரம்பமாகும் திகதியில் இதுவரை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என...

பாடசாலைகள் மீள ஆரம்பமாகும் திகதி தொடர்பான தீர்மானம்

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான திகதியை திருத்துவது தொடர்பில் இதுவரை எந்த முடிவும்...

வௌிநாட்டு நன்கொடைகளை சுங்கவரியின்றி இறக்குமதி செய்ய திட்டம்

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை...

ஐக்கிய அரபு எமிர் இராச்சியத்திலிருந்து உதவி

இலங்கை எதிர்கொள்ளும் பேரிடர் சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவி வழங்குவதற்காக...