Date:

ஜோ பைடன் – அங்கலா மேர்க்கல் சந்திப்பு

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எதிர்வரும் வியாழக்கிழமை ஜேர்மன் அதிபர் அங்கலா மேர்க்கலுடன் ஒரு சந்திப்பை நடத்துவார் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

நேட்டோ நட்பு நாடுகளுக்கிடையேயான ஆழமான மற்றும் நீண்டகாலம் உறவுகளை வலுப்படுத்தும் முகமாக இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள நிறுவனங்களைத் தாக்கிய ரம்சம்வார் தாக்குதல் மற்றும் ரஷ்யா- ஜேர்மனிக்கு இடையிலான நோர்ட் ஸ்ட்ரீம் 2 எரிவாயு குழாய் இணைப்பு திட்டம் குறித்து இதன்போது பேச்சு நடைபெறவுள்ளது.

இரு நாடுகளுக்கிடையேயான உறவையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்தும் வகையில் குறித்த உத்தியோகபூர்வ விஜயம் இடம்பெறும் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

இந்த வருடம் ஜனவரி மாதம் அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்ற பின்னர் வொஷிங்டனுக்கு ஜேர்மன் அதிபர் மேற்கொள்ளும் முதல் பயணம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பலத்த மழையால் 09 பிரதான நீர்த்தேக்கங்கள் வான் பாய்கின்றன

கடந்த 24 மணித்தியாலங்களில் குருநாகல் மாவட்டத்தை அண்டிய மஹா ஓயா பகுதியிலேயே...

உயர் தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு – CIDஇல் முறைப்பாடு

இம்முறை இடம்பெறும் க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள் பரீட்சைக்கு முன்னரே...

சீரற்ற காலநிலையினால் 9 பேர் பலி

சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளதாக...

திருமண பந்தத்தில் இணைந்தார் ஜீவன் தொண்டமான்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், திருமண...