Date:

சில கட்டுப்பாடுகளில் தளர்வு (படங்கள்)

இன்று (10) முதல் பயணக் கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இருப்பினும், தற்போது விதிக்கப்பட்டுள்ள மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் அடுத்த 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, திருமண வைபவங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், திருமண மண்டபங்களில் 25 சதவீதம் அல்லது 150க்கும் குறைந்த அளவில் நபர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், கோவில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் மற்றும் விகாரைகள் போன்ற மதஸ்த்தலங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொவிட் தொற்றுக்கு உள்ளாகாத மரணங்களின் இறுதிக் கிரியைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் குறித்த சடலம் விடுவிக்கப்பட்டு 24 மணித்தியாலங்களில் இறுதி கிரியைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக இறுதிக் கிரியைகளின் 50 பேர் கலந்து கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கருத்தரங்குகள், பட்டறைகள் போன்றவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் இவற்றில் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

உடை அலங்காரவியலாளர்கள், தொடர்பாடல் பிரிவினர், புகைப்படங்கள் எடுக்குமிடங்கள், ஆடையகங்கள் ஆகியனவற்றை திறப்பதற்கு அனுமதி

கைதிகளை பார்வையிடுவதற்கு உறவினர்களுக்கு மாத்திரம் அனுமதி
திரையரங்குள் மற்றும் தொல்பொருள் காட்சியகம் ஆகியன அரங்கின் கொள்ளளவில் 50 வீதமானோருக்கு அனுமதி
டெஸ்டூரண்ட் நிலையங்களை திறக்கவும் முன்பதிவின் வாயிலாக உணவுகளை எடுத்துச்செல்லவும் அனுமதி
No photo description available.
No photo description available.
No photo description available.
No photo description available.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

புதிய விசா நடைமுறை அறிமுகம்

ஈ - விசா பெற்றுக் கொள்ள குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தின் ...

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை: மேலுமொருவர் கைது

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞனை கடத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்த...

ஷாபி வழக்கு இன்னும் நிறைவு பெறவில்லை – அத்துரலியே ரதன தேரர்

நாம் ஒருபோதும் இனவாதத்தினை தூண்டவில்லை என்பதோடு ஒருபோதும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக...

சாதாரண தரப் பரீட்சை மே மாதம்- திருத்த பெறுபேறுகள்

கல்விப் பொதுத் தராதர மீள் திருத்த பெறுபேறுகள் இவ்வருட சாதாரண தரப்...