Date:

பழம்பெரும் இந்தி நடிகரை இழந்தது உலக சினிமா

பழம்பெரும் இந்தி நடிகர் திலீப்குமார் இன்று தனது 98ஆவது வயதில் மும்பையில் காலமானார்.

புகழ்பெற்ற மதுமதி, மொகலே ஆசாம், ராம் அவுர் ஷ்யாம், லீடர் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்தவர் திலீப்குமார்.

பிரிவினைக்கு முந்தைய பாகிஸ்தானில் பிறந்த அவரது இயற்பெயர் யூசுப் கான். மும்பைக்கு குடிவந்த பின் 1944 ஆம் ஆண்டு ஜ்வார் பாட்டா படம் மூலம் பொலிவுட்டில் நடிக்கத் தொடங்கி இந்தியாவின் முதுபெரும் நடிகராக விளங்கினார். அழுத்தமான வசன உச்சரிப்பு, முகபாவங்களால் பல ரசிகர்களின் அன்பை அவர் பெற்றிருந்தார்.

BREAKING பாலிவுட் நடிகர் திலீப்குமார் காலமானார்! - TopTamilNews

பத்மவிபூஷண், தாதா சாகேப் பால்கே உள்பட ஏராளமான உயரிய விருதுகளை அவர் பெற்றுள்ளார். 2000 முதல் 2006 வரை அவர் மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக பதவி வகித்தார்.

முதுமை காரணமாக நாள்பட்ட நோய்களுக்கு சிகிச்சை பெற்று வந்த திலீப்குமார் மும்பை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார். அரசியல் கட்சியினர், திரையுலகினர் ஏராளமானோர் திலீப்குமாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

காயத்ரி டயஸ் CID யில் முன்னிலை

பிரபல அழகுக் கலை நிபுணரும், நடிகையுமான காயத்ரி டயஸ், இன்று (24)...

Amazon உயர்கல்வி நிறுவனத்தின் மாபெரும் பட்டமளிப்பு விழா!

சுமார் 17 வருடங்களாக தலைநகரில் இயங்கி வரும் Amazon College &...

பலத்த மழையால் 09 பிரதான நீர்த்தேக்கங்கள் வான் பாய்கின்றன

கடந்த 24 மணித்தியாலங்களில் குருநாகல் மாவட்டத்தை அண்டிய மஹா ஓயா பகுதியிலேயே...

உயர் தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு – CIDஇல் முறைப்பாடு

இம்முறை இடம்பெறும் க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள் பரீட்சைக்கு முன்னரே...