Date:

சேருவில பிரதேச சபையை கைப்பற்றிய மொட்டு

திருகோணமலை மாவட்டத்தின் ஐக்கிய தேசியக் கட்சியின் கீழிருந்த  சேருவில பிரதேச சபையின் அதிகாரத்தை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கைப்பற்றிக் கொண்டது.

கடந்த 7 மாதங்களாக இயங்காத நிலையிலிருந்த இந்த சபைக்கு, நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, புதிய தவிசாளர் ஒருவரை தெரிவு செய்வதற்கான பிரேரணை நேற்று (2) முன்வைக்கப்பட்டு, வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது.

இதன் போது சபையின் புதிய தவிசாளராக ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவின்  உறுப்பினர் டப்ளியு.ஏ.ஜயசிரி, மேலதிக வாக்குகளால்  தெரிவு செய்யப்பட்டார். இதனூடாக, இந்த சபையின் அதிகாரத்தை ஐக்கிய தேசியக் கட்சி இழந்தது.

மொத்தம் 15 உறுப்பினர்களைத் கொண்ட இந்த சபையில் ஐ.தே.கட்சி 6 உறுப்பினர்களையும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 4 உறுப்பினர்களையும்  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி 3 உறுப்பினர்களையுமு் இலங்கை தமிழரசுக் கட்சி,  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன தலா ஓர் உறுப்பினரையும் கொண்டிருந்தன.

இன்றைய வாக்கெடுப்பின் போது, புதிய தவிசாளருக்கு ஆதரவாக, 9 வாக்குகளும் எதிராக 6 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் 4 உறுப்பினர்களும்  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 3 உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஒருவரும்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சேர்ந்த ஒருவரும் ஆதரவாக  வாக்களித்தனர்.

ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த 5 உறுப்பினர்களும் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த ஒரு உறுப்பினரும் எதிராக வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய வாக்கெடுப்பு இடம்பெற்ற ​வேளையில்,   திருகோணமலை மாவட்ட பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவான் அத்துகோரள, சபையில்  பிரசன்னமாகி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் தலைமையான கட்சியே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சம்பத் மனம்பேரிக்கு தடுப்புக்காவல்

பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையில் நீதிமன்றில் சரணடைந்த சந்தேகநபரான சம்பத் மனம்பேரியை...

(SJB) உறுப்பினர்கள் மீதான தடையை நீக்கியது (UNP)

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான...

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மக்களுக்கு வழங்கிய மகிழ்ச்சியான செய்தி

2022-2023 பொருளாதார நெருக்கடியும் அதனால் ஏற்பட்ட சமூக துயரமும் தற்செயலானவை அல்ல...

சுகயீன விடுமுறையில் குதித்த மின்சார சபை ஊழியர்கள்

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இன்று (17) சுகயீன விடுமுறையை அறிவித்து,...