மிகை வரி சட்டமூலத்துக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி உயர்நீதிமன்றில் மனு தாக்கல் செய்துள்ளது.
கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
மிகை வரி அறவீட்டு சட்டமூலத்தை அவைத் தலைவர் தினேஷ் குணவர்தன நேற்று (22) நாடாளுமன்றில் சமர்ப்பித்திருந்தார்.
2,000 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக வரி அறவிடக்கூடிய வருமானத்தை ஈட்டும் நபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு ஒரு தடவை மாத்திரம் அறிவிடப்படும் குறித்த 25 சதவீத மிகை வரி தொடர்பான சட்டமூலத்திற்கு அண்மையில் அமைச்சரவை அனுமதியளித்திருந்தது.
எவ்வாறாயினும் இந்த வரி ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி மற்றும் 9 பிற நிதியங்களுக்கு அறவிடப்படமாட்டாது என நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.