இரு நாட்டு எல்லைகளில் மீனவர்களுக்கு இடையே அவ்வப்போது ஏற்படும் மோதல்கள், தாக்குதல்கள் மற்றும் நெருக்கடிகளால் இந்திய-இலங்கை உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
2021 செப்டம்பரில் இரு நாடுகளின் கடற்படை உயர்மட்டத் தலைவர்கள் சந்தித்து குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், தொடர்ந்து பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றுவரும் நிலையில் இரு நாட்டு மீனவர்களுக்கு இடையிலான நெருக்கடிகள் மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் காணப்படுகின்றது.
மேலும் குறித்த கலந்துரையாடலில் இரு நாட்டு கடற்படையினரின் இடையே பரஸ்பர புரிதலை மேம்படுத்துவது குறித்து கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.
இந்நிலையில் இந்திய கடற்றொழிலாளர்களுடனான முரண்பாடுகளை தவிர்க்கும் நோக்கில் தொடர்ந்தும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என தீர்மானித்துள்ளதாக இலங்கை மீனவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.மேலும் எல்லை தகராறு காரணமாக மீன்பிடி சாதனங்கள் மற்றும் வலைகளை இழந்து வருவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இலங்கை மீனவர்கள் நெருக்கடியை தீர்க்க அதிகாரிகளிடமும், உள்ளுர் அரசியல் அதிகாரிகளிடமும் எவ்வளவோ முறைப்பாடுகள் செய்தும்; இதுவரை தீர்வு காணப்படவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்த மீனவர்கள்—
‘நாங்கள் எங்கள் எல்லையை தாண்டி கடலுக்குச் செல்ல மாட்டோம். சிறிது தூரம் மட்டுமே மீன்பிடிக்கச் செல்கிறோம்இநாம் நமது கடல் எல்லையைத் தாண்டாவிட்டாலும். இந்திய மீனவர்கள் அவர்களின் கடல் எல்லைக்கு அப்பால் மீன் பிடிநடவக்கைகளில் ஈடுப்படுகின்றனர். எங்கள் கடல் எல்லைகளைக் குறிக்க நாங்கள் அவர்களுக்கு தீப்பந்தங்களைக் கொண்டு சமிக்ஞை செய்வோம் நாம் தூங்கும் போதோ அல்லது சமிஞ்ஞை விளக்குகள் இல்லாத போதோ அவரகளை தடுக்க முடியாமல் போகின்றது.
ஆனால் அவர்கள் திட்டமிட்டு எமது மீன்பிடித் தளங்களை ஆக்கிரமித்து எமது மீன்பிடி வலைகளை சேதப்படுத்துகின்றனர். இதுபோன்ற சம்பவங்களால் பதிவாகியுள்ளதுடன், மீன்பிடி சாதனங்கள், வலைகள் மற்றும் மீனவர்களும் உயிரிழந்துள்ளனர்.
எமக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் தொடர்பில் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் உட்பட பல நிறுவனங்களுக்கு முறைப்பாடு செய்துள்ளோம். இதற்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு நிரமங்களுக்குள்ளாகிவருகின்றோம்.
‘எமது நாட்டின் எல்லைக்குள் நுழைய வேண்டாம் என்று நாங்கள் கூறியுள்ளோம்.இருப்பினும் அவர்களின் அத்துமீறல்கள் தொடர்ந்தவண்ணம் காணப்படுகின்றது.
மேலும் அவர்களால் எங்கள் உபகரணங்கள் மற்றும் வலைகள் தொடர்ந்து சேதமாக்கப்படுகின்றன. இப்போது இரண்டு உயிர்களை இழந்துள்ளோம். இதற்கு அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும்.
இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு அமைச்சர் ஒருவர் இங்கு வந்த போதிலும், எமக்கு இதுவரை எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை. இது குறித்து இரண்டு நாட்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினோம். இன்னும் தீர்வுக்காக காத்திருக்கிறோம்.
‘நாங்கள் எங்கள் எல்லையிலும் அவர்கள் அவர்களின் எல்லையிலும் மீன்பிடித்துக் கொண்டிருந்தால், இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாது.இந்திய படகுகள் நமது எல்லைக்குள் நுழையாத வகையில் இரு நாட்டு அரசுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட இருநாட்டு அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்.
சட்டத்தை கடுமையாக பின்பற்றினால், நம் மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடித்து வாழ்க்கையை நடத்த முடியும்.
இந்த விவகாரத்தில் இலங்கை ஜனாதிபதியும் மற்றும் பிரதமரும் தலையிட்டு இந்திய பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினால், எதிர்காலத்தில் இதுபோன்ற உயிரிழப்புகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் அழிவை தடுக்க முடியும் என பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்தனர்.