எரிபொருள் விலையில் அதிகரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
அவர்மேலும் தெரிவிக்கையில் “ரஷ்யா மற்றும் யுக்ரேன் இடையிலான நெருக்கடி நிலை மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைக்கான விலை உயர்வு போன்ற காரணங்களினால் சர்வதேச அளவில் எண்ணைக்கான விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமான நாட்டில் எரிபொருள் விலையில் அதிகரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. நாங்கள் எரிபொருள் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்படவில்லை இருப்பினும், அதிகரிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் விலை அதிகரிக்கின்றபோது விலை அதிகரிப்பது போன்று விலை குறையும் போது அதன் பயன்களை மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற நிலையில் நாங்கள் உள்ளோம்” என்றார்.