நுவரெலியா பிரதான நகரில் டீசலுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதுடன் வரையறுக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் “டீசல் இல்லை” என்ற பதாதைகள் தொங்க விடப்படிருப்பதை அவதானிக்க முடிந்தது
நுவரெலியா பிரதான நகரில் எரிபொருள் நிலையங்கள் உள்ள போதிலும் எரிபொருள் நிலையங்களிலும் டீசல் வினியோகம் செய்யப்படவில்லை இதனால் நீண்ட வரிசையில் வாகனங்கள் தரித்து நிற்பதை அவதானிக்க முடிந்தது இதனால் பிரதான பாதையில் வாகன நெரிசல் ஏற்பட்டது
நாட்டில் ஏற்பட்டுள்ள டீசல் தட்டுப்பாடு காரணமாக பெற்றோலுக்கும் ,மண்ணெண்ணெய்க்கும் இவ்வாறு தட்டுப்பாடு ஏற்படலாம் என அஞ்சி எரிபொருளை சேமித்து வைப்பதில் பொது மக்கள் ஆர்வம் காட்டுவதை காணமுடிந்தது
இவ்வாறு டீசலுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதனால் பெற்றோல் கொள்வனவு செய்வதற்கு பாரிய அசெளகரியங்களுக்கு முகம்கொடுத்தனர்