இன்று இலங்கைக்கு பிரித்தானியாவில் இருந்து அனுப்பப்பட்ட கழிவு கொள்கலன்களின் இறுதி தொகுதி மீள ஏற்றுமதி செய்யப்பட்டதாக சுங்கப்பிரிவின் பேச்சாளர், பிரதி சுங்க பணிப்பாளர் சுதத் டி சில்வா இந்த விடயத்தை தெரிவித்தார்.
இதன்படி, 45 கழிவு கொள்கலன்கள் கொழும்புத் துறைமுகத்தின் சி.ஐ.சி.டி முனையத்திலிருந்து கப்பலில் ஏற்றப்பட்டுள்ளது.
மருத்துவ இரசாயன கழிவுகள் உள்ளிட்ட 242 கொள்கலன்கள் 2019 ஆம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அவை களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தன.
இந்த கொள்கலன்கள் பல்வேறு கட்டங்களாக மீள் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தன.இந்தநிலையில், இறுதி தொகுதி அடங்கிய கப்பல் இன்றிரவு நாட்டிலிருந்து வெளியேறும் என தெரிவிக்கப்படுகின்றது.