கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த கடற்படையினரால், யாழ்ப்பாணம் கோவளம் வெளிச்ச வீட்டிலிருந்து வடமேற்கு திசையில் இலங்கை கடற்பரப்பில் வைத்து இன்று அதிகாலை 6 மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டிலேயே குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை படகுடன் மயிலட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு கடற்படையினர் அழைத்துச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.