சுகாதார தொற்று நோயியல் பிரிவு தடுப்பூசி பெற்றுக் கொண்டோரின் விபரம் பற்றிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது .
அதன்படி, நாட்டில் இதுவரை 16,829,089 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸும், 14,052,854 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸும் போடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இதுவரை 6,372,961 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.