இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் – ரோஹித் தாமோதரன் திருமணம் இன்று நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் மணமக்களை வாழ்த்தினார்.


இந்திய திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் – ரோஹித் தாமோதரன் திருமணம் இன்று (27-06-2021, ஞாயிற்றுக்கிழமை) காலை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வெல்கம் ஹோட்டலில் நடைபெற்றது.


கொரோனா பாதுகாப்பு கருதி மணமகன் மணமகளின் பெற்றோர் மற்றும் மிக முக்கிய சொந்தங்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.இதற்கா பிரம்மாண்ட செட் போட்டு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது.


முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களும், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களும், நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களும் இத்திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.


இவர்களது திருமணத்தை மகாபலிபுரத்தில் உள்ள ரெசார்ட்டில் பிரம்மாண்ட மேடை அமைத்து நடத்துகிறார் இயக்குநர் ஷங்கர். 2.0 படத்தின் கலை இயக்குனரான முத்துராஜ் இந்த மேடை செட்டை அமைத்துள்ளார்.