Date:

நான்காவது தடுப்பூசி செலுத்தப்படுமா?

வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கையர்களின் தேவைப்பாடு காரணமாக பூஸ்டர் தடுப்பூசியுடன் நான்காவது தடுப்பூசியையும் செலுத்துவதற்கு தயாராகி வருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

பல்வேறு நாடுகளில் காணப்படும் சட்டங்களுக்கு அமைவாக வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கை பணியாளர்களுக்கு செயலூக்கி தடுப்பூசியின் பின்னர் மற்றுமொரு தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

இதேவேளை நபரொருவருக்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் காணப்படுமாயின் உடனடியாக வைத்தியரை அணுகுமாறு சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இதுதொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள தகவலின் படி, உலகம் முழுவதும் ஒமைக்ரொன் வைரஸ் திரிபின் பரவல் குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன் தலைமை தொழில்நுட்ப அதிகாரி மரியா வேன் கர்கோச் கருத்து தெரிவிக்கையில்,  ஒமைக்ரொன் திரிவு டெல்டாவைப் போல கடுமையானது அல்ல என்றாலும் அதை புறக்கணிக்க முடியாது என குறிப்பிட்டார்.

விசேடமாக BA 2 எனப்படும் ஒமைக்ரொன் திரிபானது அதிக பரிமாற்றத் திறனைக் கொண்டுள்ளது.

மேலும் இது BA திரிபைக் காட்டிலும் நோயை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதா? என்பதைக் கண்டறிய மேலும் பரிசோதனைகள் இடம்பெற்று வருகின்றன.

தற்போது உலகளவில் பதிவாகியுள்ள ஒவ்வொரு ஐந்து கொரோனா வைரஸ்களிலும் ஒன்று ஒமைக்ரொன் வகையின் BA இன் இரண்டு பிறழ்வுகளால் ஏற்படுகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

யோஷிதவிற்கு எதிரான வழக்கு : நவம்பர் 12ஆம் திகதி விசாரணைக்கு உத்தரவு

யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபொரஸ்ட் ஆகியோருக்கு எதிராக...

நியூயோர்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் தெரிவு

நியூயோர்க் நகரத்தின் வரலாற்றில், முதல் முஸ்லிம் மேயராக ஸோஹ்ரான் மாம்டானி தெரிவு...

பிலிப்பைன்சை தாக்கிய சூறாவளி; 60க்கு மேற்பட்டோர் பலி

ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடு பிலிப்பைன்ஸ். இந்நாட்டை நேற்று கல்மேகி என்ற...

சரித்த ரத்வத்தே பிணையில் விடுதலை

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மூத்த ஆலோசகராக இருந்த காலத்தில், உரிய...