றம்புக்கணையிலிருந்து கொழும்பு – கோட்டை நோக்கிப் பயணித்த கடுகதி ரயில் ஒன்று தடம்புரண்டமையால், பிரதான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன என ரயில் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, வெயாங்கொடைக்கும், கம்பஹாவுக்கும் இடையிலான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், குறித்த ரயிலை தடமேற்றும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.