ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை நிலைபெறுதகு வலு அதிகாரசபைக்கு திடீர் விஜயம் மேற்கொண்டுள்ளார்.
நீர், சூரிய ஒளி மற்றும் காற்று போன்றவற்றை மின் உற்பத்திக்கு பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்வதற்காக இலங்கை நிலைபெறுதகு வலு அதிகாரசபையின் அதிகாரிகளை நேரடியாகச் சந்திப்பதே இந்த விஜயத்தின் நோக்கமாகும்.