Date:

இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரிப்பதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், கடந்த 12ஆம் திகதியே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குள் பிரவேசித்துள்ளனர்.

அன்றைய தினத்தில் 4 ஆயிரத்து 677 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளனர்.

கடந்த ஆண்டு நாள் ஒன்றில் அதிகளவான சுற்றுலா பயணிகளின் வருகை, டிசம்பர் மாதம் 25ஆம் திகதி பதிவானது.

குறித்த தினத்தில் 4 ஆயிரத்து 829 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும் இந்த ஆண்டின் முதல் 12 நாட்களுக்குள் மாத்திரம் 39 ஆயிரத்து 621 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குள் பிரவேசித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பல நீர்த்தேக்கங்கள் வான் பாய்கின்றன: நீர்மட்டம் குறித்து எச்சரிக்கை

பெய்து வரும் மழையுடன் விக்டோரியா, ரந்தெனிகல மற்றும் ரந்தெம்பே நீர்த்தேக்கங்கள் ஏற்கனவே...

கொட்டாஞ்சேனையில் கத்திக்குத்து: ஒருவர் உயிரிழப்பு

கொட்டாஞ்சேனை 6ஆம் ஒழுங்கைப் பகுதியில் இன்று (18) மாலை இடம்பெற்ற கத்திக்குத்துச்...

சீரற்ற காலநிலையால் மீண்டும் மூடப்படும் பாடசாலைகள்

மத்திய மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளையும் நாளை (19) மற்றும் எதிர்வரும் திங்கட்கிழமை...

இலங்கையின் களத்தடுப்புப் பயிற்றுவிப்பாளராக ஆர். சிறீதர்

இலங்கையின் களத்தடுப்புப் பயிற்றுவிப்பாளராக இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம் முடிவு...