இன்று எரிபொருளை நிரப்புவதற்காக இலங்கை கனியவள கூட்டுத்தாபன எரிபொருள் நிரப்பும் நிலையங்களின் வளாகத்தில், வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தினால், எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் விலை அதிகரிப்பை மேற்கொள்ள இலங்கை கனியவள கூட்டுத்தாபனம், நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
எவ்வாறிருப்பினும், எரிபொருள் விலையை அதிகரிக்க இதுவரையில் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இதேநேரம், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, தாங்கள் பெரும் அசௌகரியத்துக்கு முகங்கொடுத்துள்ளதாக, கொள்கலன் போக்குரத்து வாகன உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.