Date:

திங்கள் முதல் பொதுப் போக்குவரத்து சேவைகள் இயங்காது – இராஜாங்க அமைச்சர்

நாட்டில் அடுத்த வாரம் முதல் மாகாணங்களுக்கிடையில் பொதுப் போக்குவரத்து சேவைகள் இயங்காது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், தற்போதைய சூழ்நிலையில் பொதுப் போக்குவரத்து சேவையை மீண்டும் தொடங்குவதற்கு, கொரோனா கட்டுப்பட்டு நிலையம் பரிந்துரைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

அத்தியாவசிய சேவை ஊழியர்களுக்காக மாகாணங்களுக்கு இடையில் சில பேருந்துகள் மற்றும் புகையிரத சேவைகள் இயங்கினாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகதிங்கட்கிழமை முதல் அந்த சேவைகளும் இடம்பெறாது என கூறினார்.

மேலும் அத்தியாவசிய சேவைகளுக்காக மாகாணங்களுக்கு இடையில் பேருந்துகள் மற்றும் புகையிரத சேவைகளை மீண்டும் தொடங்குவது தொடர்பாக அடுத்த வாரம் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவிடமிருந்து உறுதியான முடிவை எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

“ஹரக் கட்டா” கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி!

பூஸா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பாதாளகுழுவைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரான “ஹரக் கட்டா”...

நேபாளத்தில் புதியவகை கொரோன தோற்றால் 35 பேர் பாதிப்பு!

நேபாள நாட்டில் பரவி வரும் புதிய வகை கொரோனா தொற்றால், 7...

செம்மணி மனித புதைகுழி விடயத்தில் அழுத்தம் கொடுப்பதாக பிரித்தானியா அறிவித்துள்ளது!

செம்மணி மனித புதைகுழி தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளது. அத்துடன்...

ராகம, கந்தானை உள்ளிட்ட பகுதிகளில் விசேட சோதனை நடவடிக்கை!

ராகம, கந்தானை மற்றும் வத்தளை பகுதிகளுக்கு நேற்று (04) இரவு இராணுவம்...