Date:

முதல் ஆப்பை இராணுவத் தளபதிக்கு வைத்த ரணில்

கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதில் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையிலான செயற்பாட்டு மையம் தோல்வி கண்டுள்ளது – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க குற்றஞ்சாட்டினார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க, உரையாற்றுகையில் கூறியவை வருமாறு,

” கொவிட் தடுப்பு விசேட படைப் பிரிவு முழுமையாக தோல்வியடைந்துள்ளது. அதனால் முன்னோக்கி செல்ல முடியாது. அரசியலமைப்பின் பிரகாரம் கொரோனா ஒழிப்புக்கு தலைமை வகிப்பதற்கான பொறுப்பு அமைச்சரவைக்கு இருக்கின்றது.

அமைச்சரவை தவறிழைத்தால், நாடாளுமன்றத்தில் அதனை நாம் சுட்டிக்காட்டுவோம். ஆனால் ஒரு திணைக்களத்தின் தலைவர் ஒருவருக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதை ஏற்கமுடியாது.
இராணுவத் தளபதியால் இதனை செய்ய முடியாது. எனவே அமைச்சரவை இதனைப் பொறுப்பேற்க வேண்டும்.

இராணுவம் நாட்டை நிர்வகித்து வருகிறது. இது தவறு. முதலீட்டுச் சபை மாநாட்டில் இராணுவத் தளபதி உரையாற்றுகிறார். இதனால் வந்த முதலீட்டாளர்களும் சென்றிருப்பார்கள். இது பிழையான முன்னுதாரணம். இராணுவத் தளபதி எனது நண்பர். உதவியும் செய்துள்ளார். ஆனால் இராணுவ மயமாக்கலை அனுமதிக்க முடியாது.” – என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

உயிரிழப்பு 474 ஆக அதிகரிப்பு

சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் மொத்த...

இலங்கை அனர்த்த மீட்புப் பணிக்கு ஆப்பிள் நிறுவனம் நிதியுதவி

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான Apple நிறுவனம், ஆசியாவில் பேரழிவுகளால்...

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட தொலைத்தொடர்பு

அனர்த்த நிலைமை காரணமாகப் பாதிக்கப்பட்ட தொலைபேசி மற்றும் இணையத் தொடர்பு வலையமைப்பை...

வீடுகளைச் சுத்தம் செய்வதற்கான கொடுப்பனவு 25,000 ரூபாவாக அதிகரிப்பு

அனர்த்தம் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்கள் மீண்டும் தமது வீடுகளுக்குத் திரும்பும் போது,...