நாடு திரும்பினார் ஜனாதிபதி அநுர

இந்தியாவிற்கான இருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (17) நாட்டை வந்தடைந்தார். இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்த விஜயத்தை மேற்கொண்டிருந்ததுடன், இதன்போது...

நிசாம் காரியப்பர் எம்.பியாக பதவிப்பிரமாணம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பர் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலில் இருந்து பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுள்ளார்.

பாடசாலை மாணவர்களுக்கு 6,000 ரூபாய் கொடுப்பனவு

2025ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த 125,000 மாணவர்களுக்கு 6,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர்...

’சமய மரபுகளை அவமதிக்கும் தீர்மானத்தை மேற்கொள்ளோம்’- பிரதமர்

கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களை தகனம் செய்ததன் மூலம் சமய மரபுகளுக்கும் அம்மக்களுக்கும் இழைக்கப்பட்ட அநீதியை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று (17) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அவர்...

பைஸர் முஸ்தபா எம்.பீ .யாக சத்தியப் பிரமாணம்

ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா இன்று பிரதி சபாநாயகர் முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

நான் விசேட வைத்திய நிபுணரல்ல – பிரதி சபாநாயகர்

தான் ஒரு விசேட வைத்திய நிபுணர் அல்ல என்றும் தனது உத்தியோகபூர்வ கடிதங்களிலும், விசிட்டிங் கார்டுகளிலும், மருந்துச் சீட்டுகளிலும் அவ்வாறான தலைப்பைப் பயன்படுத்தியதில்லை என்றும் பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி இன்று தெளிவுபடுத்தினார். "தேர்தல்...

எம்.பி அர்ச்சுனா உள்நுழைய தடை

யாழ்.போதனா வைத்தியசாலையில் நோயாளர் என்ற ரீதியில் மாத்திரமே பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா உள்ளே அனுமதிக்கப்படுவார் என்றும், வேறு எந்த காரணத்திற்காகவும் அவர் உள்நுழைய முடியாது எனவும் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் அலுவலகம்...

மனோ கணேசன் சத்திப்பிரமாணம்

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பாராளுமன்ற உறுப்பினராக  பிரதி சபாநாயகர் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை (17) சத்திப்பிரமாணம் செய்துகொண்டார்.