
நாட்டின் பணவீக்கம் ஒகஸ்ட்டில் 8.1 ஆக உயர்வு
2026 ஒகஸ்ட் மாதத்திற்கான தேசிய முதன்மை பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு 8.1% ஆக அதிகரித்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
திணைக்களம் இன்று (21) வெளியிட்டுள்ள இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின்...

குறைந்த அழுத்தப் பிரதேசம் தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்
நாட்டிற்கு வடகிழக்காக அந்தமான் பகுதிக்கு அருகில், வங்காள விரிகுடாவில் உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இத் தொகுதியின்...

அமெரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்திற்கு தயாராகும் சீன ஜனாதிபதி
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்வதற்கு தயாராகி வருகின்றார்.
இதற்கமைய, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பிற்கு இணங்க, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி...

மேன்முறையீடு செய்தது ஏன்? …அனோஜனை காக்க உடனடி சட்ட, இராஜதந்திர நடவடிக்கை தேவை – பைஸர் முஸ்தபா
( ஐ. ஏ. காதிர் கான் )
"சவூதி அரேபியாவில் தண்டனையை எதிர்நோக்கியுள்ள நற்பிட்டிமுனையைச் சேர்ந்த இலங்கை இளைஞர் சிவராசா அனோஜனின் உயிரைக் காப்பாற்ற, அவசரமான சட்ட மற்றும் இராஜதந்திர தலையீடு அவசியம்" என,...
கோட்டாபய ராஜபக்ஸவின் முன்னாள் பிரத்தியேக செயலாளறுக்கு மீண்டும் விளக்கமறியல்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவின் பிணை மனுவை கோட்டை நீதவான் நீதிமன்றம் நிராகரித்ததுடன், அவரை ஜூலை 22ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
ரணிலுக்கு எதிரான வழக்கு: விசாரணைகள் நிறைவு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க ஆகியோருக்கு எதிரான வழக்கின் விசாரணைகள் நிறைவு.
விசாரணை அறிக்கை சட்ட மாஅதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவிப்பு.
அமெரிக்க – ஈரான் போர் நிறுத்தம் முடிவுக்கு – ட்ரம்ப்
அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இருநாடுகளுக்கும் இடையிலான சமாதான ஒப்பந்தம் குறித்து அவரிடம் ஊடகவியலாளர்கள் வினவிய போதே, அவர் இந்த விடயத்தை...
மற்றுமொரு சிறைச்சாலை அதிகாரியும் உயிரிழப்பு
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறைச்சாலை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு சிறையில் பதற்றம்
மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர், தன்னுயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து மட்டக்களப்பு சிறைச்சாலையிலும் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
மொரட்டுவ பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டது
சில மாணவர்களுக்கு டெங்கு தொற்று ஏற்பட்டதன் காரணமாக மொரட்டுவ பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டது.






