கொங்கோவில் விமானம் விபத்து – 14 பேர் பலி

கொங்கோவில் ஏற்பட்ட விமான விபத்தில் இராணுவ அதிகாரிகள் உள்பட 14 பேர் பலியாகியுள்ளனர்.

 

கொங்கோவில் தென்மேற்கே கிக்வித் நகரில் இருந்து கின்ஷாசா நகர் நோக்கி விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.

 

அதில், லெப்டினென்ட் ஜெனரல் முதும்போ கடாளை தியண்டே மற்றும் லெப்டினென்ட் ஜெனரல் பகுமி லிகுலியா என்ற 2 சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் 12 பேர் பயணித்து உள்ளனர்.

 

இந்நிலையில், கெங்கே என்ற இடத்தில் சென்றபோது, விமானம் திடீரென்று விபத்தில் சிக்கியது.

 

இந்த சம்பவத்தில் அதில் இருந்த இராணுவ அதிகாரிகள் உள்பட 14 பேரும் பலியானார்கள்.

 

இதனை கொங்கோ இராணுவத்தின் செய்தி தொடர்பாளரான மேஜர் ஜெனரல் எபோமி எகெங்கே வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.

 

விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் விபத்து ஏற்பட்டிருக்க கூடும் என்று கூறப்படுகிறது.

 

எனினும் இதுபற்றி விமான போக்குவரத்து கழக தலைவர் டிரைபோன் கின்-கை கூறும்போது, விபத்திற்கான காரணம் பற்றி தெரியவில்லை. இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது என கூறினார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

யேமன் படைகளுக்கும் ஹூதிகளுக்கும் இடையே மீண்டும் சண்டை ஆரம்பம்

லஹிஜ் மாகாணத்தின் தூர் அல்-பஹா பகுதியில், இராணுவத் துணைப் படைகளைக் குறிவைத்து பீரங்கி மற்றும் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், யேமன்...

ஈரானிய வான்வழித் தாக்குதல்களை இடைமறித்ததாக பஹ்ரைன் இராணுவம் அறிவிப்பு

ஈரானிய வான்வழித் தாக்குதல்களைத் தாங்கள் இடைமறித்து, தெஹ்ரான் தனது இலக்கை அடைவதைத் தடுத்ததாக பஹ்ரைன் இராணுவம் கூறுகிறது.     எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு பதிவில்,...