News Desk

5677 POSTS

Exclusive articles:

“நாளை மீள்கிறது இலங்கை”

இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச பிணைமுறி உரிமையாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் வியாழக்கிழமை (19) நடைபெறவுள்ளதாகவும், அதன் பின்னர் இலங்கையின் வங்குரோத்து நிலை முற்றாக முடிவடைந்து அனைத்து நாடுகளினதும் ஆதரவு மீண்டும் நாட்டுக்குக் கிடைக்கும் எனவும்...

பழம்பெறும் நடிகை சி.ஐ.டி. சகுந்தலா காலமானார்

பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 84. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து பல இரசிகர்களால் கவரப்பட்டவர் ஏ.சகுந்தலா. இவர் கடந்த 1970ஆம்...

அனுரவை பதற்றமடைய வைத்த புறா

பாறுக் ஷிஹான் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்கவினை புறா ஒன்றின் மூலம் பதற்றமடைய காரணமான இருவர் எச்சரிக்கை செய்யப்பட்டு சம்மாந்துறை பொலிஸாரினால் விடுவிக்கப்பட்டுள்ளனர். தேசிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்டத்திற்கான  சம்மாந்துறை  தொகுதியில்  தேர்தல் பிரச்சார கூட்டம் க  வெள்ளிக்கிழமை(13)  நடைபெற்றிருந்தது. இதன் போது அதிகளவான மக்கள் மத்தியில்  ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க உரையாற்றி கொண்டிருந்தார். இதன் போது அவர் உரையாற்றி கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் மேடையை அண்மித்த  வானத்தில் இருந்து சிவப்பு நிற மின்னொளி  பாய்ச்சப்பட்டு ஏதோவொரு மர்மபொருள்  நகர்ந்து வந்துள்ளது. இந்நிலையில் இக் கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த  தேசிய மக்கள் சக்தியின் தலைவரும்  ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திஸாநாயக்க  உடனடியாக உசாரடைந்ததுடன் தனது பாதுகாப்பு அதிகாரிகளின் ஆலோசனைக்கமைய   பாதுகாப்பிற்காக  மேடையில் இருந்து சிறிது நேரம்  அகற்றப்பட்டார். பின்னர் கூட்டம் தொடர்ச்சியாக நடைபெற்று முடிவடைந்த பின்னர் சம்பவம் தொடர்பில்   சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத்  வழிகாட்டுதலில் பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான பொலிஸ்  குழுவினர்  விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். இதன் போது கூட்டம் நடைபெற்ற பகுதியில்   இருந்து   LED LIGHT   பொருத்திய 'புறா' பறந்து சென்றதை விசாரணை ஊடாக அறிந்ததுடன் அப்பகுதியில் புறா வளர்ப்பில் ஈடுபடும்  18 மற்றும் 19 வயது  மதிக்கத்தக்க இரு இளைஞர்களை  திங்கட்கிழமை (16)   கைது செய்து  விசாரணை செய்தனர். இதன் போது கைதானவர்கள் சமூக ஊடகங்களில் காணொளியை பதிவு செய்வதற்காக இரவு வேளையில் புறாவின்  காலில் ஒரு வகையான மின் குமிழினை   பொருத்தி   அதனை தினமும் பறக்க விடுவதாக தமது   வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர். அத்துடன்  கைதான இருவரையும்  சம்மாந்துறை பொலிஸார் எச்சரிக்கை செய்து  விடுதலை செய்ததுடன்  சசம்பவம்  தொடர்பில்  மேலதிக விசாரணைகளை   மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட இளைஞன் ஒருவரின் தந்தையார் ஓய்வு பெற்ற  முன்னாள் பொலிஸ்  உத்தியோகத்தர்  என்பதும் குறிப்பிடத்தக்கது.

பரீட்சை திணைக்கள அருகில் பதற்ற நிலை

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாளில் இருந்து 03 வினாக்களை நீக்கி இறுதி புள்ளிகளை கணக்கிடுவதற்காக பரீட்சை திணைக்களம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது (18) பெற்றோர்கள், பரீட்சை திணைக்களத்திற்கு...

பெரிய வெங்காயத்தின் விலை அதிகரிப்பு

தற்போது சந்தையில் உள்நாட்டில் பயிரிடப்படும் பெரிய வெங்காயம் கிலோ ஒன்று 260 ரூபாய் முதல் 280 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெரிய வெங்காய இறக்குமதிக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளமையே, விலை அதிகரிப்புக்குக் காரணமென...

சவூதி அரேபியாவில் பிறை தென்பட்டது: நாளை நோன்பு ஆரம்பம்!

சவூதி அரேபியாவில் பிறை தென்பட்ட காரணத்தால் நாளை (18)  முதல் ரமழான்...

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தில்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் குழுவினர், பல கோரிக்கைகளை...

‘கெசானி’ புயலால் 59 பேர் பலி; 27,000 பேர் பாதிப்பு

மடகாஸ்கரில் ஏற்பட்ட கெசானி புயலால் 59 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 25,000...

ரமழானை முன்னிட்டு பேரீச்சம்பழம் அன்பளிப்பு

புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு சவூதி அரேபிய அரசாங்கம் இலங்கை முஸ்லிம்களுக்காக...