News Desk

5719 POSTS

Exclusive articles:

Online இல் வியாபாரம் செய்த முஹம்மட் நப்லான் மரணம்

அலைபேசி ஊடாக  online  வியாபார செயற்பாட்டில் ஈடுபட்டவர் தன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் சாய்ந்தமருது 11 உடையார் வீதியில் வசித்து வந்த முஹம்மட் நயீம் முஹம்மட் நப்லான் (வயது  20 ) என்ற  இளைஞனே  விரக்தி அடைந்த நிலையில் ஒரு வகையான மாத்திரைகள் உட்கொண்டு சிகிச்சை பலனளிக்காமையின் காரணமாக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ஞாயிற்றுக்கிழமை (05) மாலை மரணமடைந்துள்ளார். குறித்த மரணமடைந்தவரின் சடலம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் சவளக்கடை   பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.மேலும் மரணம் அடைந்த இளைஞன் சவளக்கடை பொலிஸ் பிரிவில் உள்ள அரிசி ஆலை ஒன்றில் கணக்காளராக பணிபுரிந்து வருகிறார். மரணமடைந்த இளைஞரின் தந்தை தனது மகன் வெளிநாட்டில் தொழில் புரிவதற்கான முன்னாயத்தங்கள் மேற்கொண்டதாகவும் அதற்காக அரிசி ஆலை ஒன்றில் கணக்காளராக சேர்த்ததாகவும் இதன்போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அண்மைக்காலமாக அம்பாறை மாவட்டத்தில் இவ்வாறான அலைபேசி   online ஊடாக  புதிய வகை வியாபார உத்திகள் உருவாக்கப்பட்டு   கொடுக்கல் வாங்கல்  இளைஞர் முதல் பல்வேறு தரப்பினரை இலக்கு வைத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறித்த online  வியாபாரம் சட்டவிரோதமானது என குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் அதில் ஆர்வம் கொண்டு பல இளைஞர்கள் முதல் பலர்  பங்கேற்று வருகின்றனர்.

இறக்குமதி செய்திருக்கும் அரிசியை சமைத்து சாப்பிட்டு காட்டுங்கள் – அமைச்சருக்கு சவால்

இறக்குமதி செய்திருக்கும் சிவப்பு பச்சை அரிசி மக்களுக்கு பயன்படுத்த முடியாத நிலையிலேயே இருக்கிறது. வர்த்தக அமைச்சர் இந்த அரிசி சமைத்து சாப்பிட்டு காட்டட்டும் என தேசிய நுகர்வோர் முன்னணியின் ஏற்பாட்டாளர் அசேல சம்பத்...

ஒப்பனை கலைஞர்களுக்கான தேசிய போட்டி கொழும்பில்…

மேக்கப் ஆர்ட்டிஸ்ட் கிளப் ஒப் லங்கா ஏற்பாட்டில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 22 திகதி ஒப்பனை கலைஞர்களுக்கான தேசிய போட்டி கொழும்பில் நடைபெறவுள்ளதாக அதன் ஸ்தாபகரும் தலைவருமான அனு குமரேசன் தெரிவித்தார். இது குறித்து...

க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தால் பெரும் அவதி; பணிப்புறக்கணிப்பில் குதிக்க தயாராகும் பேருந்து சங்கங்கள்!

க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்துக்கமைய, மேற்கொள்ளப்படும் பேருந்து சோதனை நடவடிக்கை காரணமாக தங்களது தொழில்துறை தொடர்ந்தும் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகக் கூறும் பேருந்து உரிமையாளர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் காவல்துறைமா அதிபரை சந்தித்து தீர்வு காண...

இன்று மழையுடனான வானிலை

நாட்டின் சில பகுதிகளில் இன்று (06) மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி கிழக்கு மாகாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தின் சில இடங்களில் இன்று மழை பெய்யக்கூடும். அத்துடன் சபரகமுவ மாகாணத்திலும்...

டெய்சி ஆச்சி வழக்கில் இருந்து விடுதலை

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

Breaking கைதான சுரேஷ் சலே தடுத்து வைத்து விசாரிக்கப்படுகிறார்

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அக்குரேகொட படுகொலை ; இரண்டாவது துப்பாக்கிதாரி கைது

தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி புத்திக மல்லவாரச்சியையும் அவரது மனைவியையும் சுட்டுக்...

தேசிய மக்கள் சக்தி வேட்பாளரின் வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீச்சு!

காலி, கிந்தோட்டை பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் மீது இன்று (25) அதிகாலை...