கிளிநொச்சி – இராமநாதபுரம், அழகாபுரியில் புதையல் தோண்ட முற்பட்ட குற்றச்சாட்டில் ஆறு பேர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து புதையலை கண்டறிவதற்காக பயன்படுத்தப்படும் ஸ்கேனர் கருவி கைப்பற்றப்பட்டுள்ளது.
கிளிநொச்சி இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக சுற்றிவளைப்பு நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கைதானவர்கள் தர்மபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.