Date:

நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவடைவதனாலேயே நீர் வழங்க முடியாதுள்ளது.

குண்டசாலை, பலகொல்ல, பல்லேகெல என பல பிரதேசங்களில் கடந்த 2 ஆம் திகதி முதல் நீர்வெட்டு காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைந்ததன் காரணமாக பலகொல்ல சுத்திகரிப்பு நிலையத்திற்கு நீரை வழங்க முடியாதுள்ளதாக விக்டோரியா நீர்த்தேக்கத்தின் பொறுப்பதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

விக்டோரியா நீர்த்தேக்கத்தில் இருந்து மின் உற்பத்தி மற்றும் பயிர்ச்செய்கைக்காக நீர் திறந்துவிடப்பட்டுள்ளமையினால் விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வித முன்னறிவிப்பும் இன்றி நீர் விநியோகம் நிறுத்தப்பட்டமையால் தாம் மேலும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

இன்று (11) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் சமையல்...

மின்சார ஊழியர்களுக்குக் கடும் எச்சரிக்கை: உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு உத்தரவு

2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சார (திருத்தப்பட்ட)...

டிரம்ப் – எப்ஸ்டீன் ’டைட்டானிக்’ சிலை: வாஷிங்டனில் பெரும் பரபரப்பு

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி. நகரில் உள்ள புகழ்பெற்ற 'நேஷனல் மால்' (National...

புதிய ஈரானிய உயர்மட்டத் தலைவருக்கு வடகொரியா ஆதரவு

ஈரானின் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா கமேனி தெரிவு செய்யப்பட்டமைக்கு வடகொரியா...