குறைந்தளவில் மின்சாரக் கேள்வி நிலவுமாயின், இன்றைய தினத்திலும், தடையின்றி மின்சாரத்தை விநியோகிக்க முடியும் என மின்சார சபை தெரிவித்துள்ளது.
எவ்வாறிருப்பினும், இன்றைய தினமும் சப்புகஸ்கந்த மற்றும் கொழும்பு துறைமுக பத்தள மின்னுற்பத்தி நிலையங்களுக்கு உலை எண்ணெய் அவசியமாகும் என மின்சார சபையின் பேச்சாளரான, மேலதிக பொது முகாமையாளர் அண்ட்ரூ நவமணி தெரிவித்தார்.
தற்போது எரிபொருள் இன்மையால் செயலிழந்துள்ள களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்திற்கு எரிபொருளை வழங்குவதற்கு மேலும் சில நாட்கள் ஆகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.இதன் காரணமாக தேசிய மின் கட்டமைப்புக்கு 280 மெகாவோட் மின்சாரம் கிடைக்காமல் போயுள்ளது.
கால அட்டவணைக்கு அமைய எரிபொருள் கிடைக்குமாயின் தங்களுக்கு எவ்வித பிரச்சினையும் ஏற்படாது என்றும் மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.