Date:

கோரிக்கை விடுத்தால் பேச்சுவார்த்தை நடத்தத் தயார்-சர்வதேச நாணய நிதியம்

இலங்கை அரசாங்கம் நிதி தொடர்பான கோரிக்கை விடுத்தால், அது குறித்து பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதானி இதனைத் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சர்வதேச நாணய நிதியத்தில் பணித் தலைவர் மற்றும் துணைப் பிரிவுத் தலைவர் Masahiro Nozaki கருத்து வெளியிடுகையில், “இலங்கையில் பொருளாதார மற்றும் கொள்கை முன்னேற்றங்களை நெருக்கமாகக் கண்காணித்து வருகிறது” என்று கூறினார்.

பொருளாதார அபிவிருத்திகள் மற்றும் கொள்கைகளை மீளாய்வு செய்வதற்காக வருடாந்த இருதரப்பு கலந்துரையாடலின் ஒரு பகுதியாக நிதிக் குழுவொன்று கடந்த வருடம் டிசம்பரில் கொழும்புக்கு விஜயம் செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், நாட்டின் சமீபத்திய பொருளாதார தரவுகளை மதிப்பாய்வு செய்வதற்காக பிப்ரவரி இறுதியில் ஒரு குழு கூட்டம் நடைபெறும்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, பொருளாதார பிரச்சினையைத் தீர்ப்பதற்காகச் சர்வதேச நாணய நிதியத்தின் நிபுணத்துவ ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வதற்கான கோரிக்கை எழுத்து மூலம் விடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச முன்னதாக தெரிவித்திருந்தார்.

அதேநேரம், நிதி அமைச்சின் பேரண்ட நிதிப்பிரிவுக்கு ஆலோசனை பெறும் செயற்பாடாகவே சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைப் பெறப்படுவதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், சர்வதேச நாணய நிதியத்திற்கு அனுப்பிய கடிதத்தில் பயிற்சி நிகழ்ச்சி ஒன்றுக்கு நிதியத்தின் பிரதிநிதிகளை வரவழைப்பது தொடர்பான விடயமே அடங்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

’ரி 20’ உலகக்கிண்ணக் கோப்பையை சுற்றுப்பயணம் ஆரம்பம்

2026 ஆம் ஆண்டு இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்தும் ஐ.சி.சி. இருபதுக்கு...

இலங்கை – இங்கிலாந்து மோதும் முதலாவது ஒருநாள் போட்டி இன்று!

சு்றுலா இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட்...

தேசிய கண் வைத்தியசாலையில் இன்று பணிப்புறக்கணிப்பு!

முறையற்ற விதத்தில் மேற்கொள்ளப்படும் இடமாற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று (22) கொழும்பு...

வளியின் தரம் குறைவு! | முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தல்..!

கொழும்பு உட்பட பல பகுதிகளில் வளியின் தரம் குறைவடைந்துள்ளதாக தேசிய கட்டிட...